Tuesday, April 17, 2012
[LYRICS] தேவதாருவே காமதேனுவே தேவ தூதனே கண்ணா
One of my favorite songs of all time. finally discovered the audio version and before I lose it again, penned (blogged?) down the lyrics. pardon mistakes, if any!
------------
தேவதாருவே காமதேனுவே தேவ தூதனே கண்ணா
உயர் காவல் தெய்வமே காதல் தீபமே கங்கை ஆண்டிடும் மன்னா
ஆதியும் இல்லை அந்தமும் இல்லை நீதி உன் நிலை கண்ணா
ஒரு ஜாதியும் இல்லை தனிமையும் இல்லை தர்ம தேசத்தின் மன்னா
ராதை நாதனே நான்கு வேதனே கீதை நாயகா கண்ணா
உன் பாதை எவ்வழி நாங்கள் அவ்வழி பாடி ஆடுவோம் மன்னா
எங்கு நோக்கினும் என்ன கேட்பினும் என்னை காணலாம் என்றாய்
நாங்கள் ஒன்று நோக்கினோம் ஒன்று கேட்கிறோம் உன்னை மட்டுமே கண்ணா
காட்டு மேட்டிலும் காட்டு வீட்டிலும் காவல் கொண்டவன் அன்றோ
உன் பாட்டும் கீதையும் பாண்டவர் தமை வாழ வைத்தன அன்றோ
காலம் யாவிலும் வசந்தமானவன் மாதம் யாவிலும் மார்கழி
உன் கீதம் யாவையும் புவனம் காக்கவே சேர்ப்பதொன்று தான் என் வழி
பால கிருஷ்ணனே நீல மாதவா என்றும் உன்னடி போற்றினோம்
எங்கள் பாவம் தீரவும் நன்மை சேரவும் கோவில் தீபத்தை ஏற்றினோம்
-----------------
font looks great in Firefox 11, Ubuntu 11.10, but gets cluttered in Chrome. So attaching an image version herewith.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
if possibe kindly provide audio file of the song. thanks.
Everything is possible.
https://youtu.be/bfI4YBUEXr8
Enjoy
Suresh..Hi...
I think only in the last charanam there, shall we say, some typos..
That charanam should be
காலம் யாவிலும் வசந்தமானவன் மாதம் யாவிலும் மார்கழி
உன்றன் நீதம் யாவையும் புவனம் காப்பதே நேர்மையொன்று தான் உன் வழி
பால கிருஷ்ணனே சீல மாதவா என்றும் உன்னடி போற்றினோம், எம்
பாவம் தீரவும் நன்மை சேரவும் கோவில் தீபத்தை ஏற்றினோம்
It's நீதம் not கீதம்
It's காப்பதே.. not காக்கவே
It's நேர்மையொன்று தான் and not as given
Otherwise you are perfect..
All the best.
Vamanan
Post a Comment